தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் நேற்றைய தினம் அமுலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனையடுத்து மேலதிக விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமுலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் உடனடியாக அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமைச்சர் பாலாஜியின் உடலநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும், சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.