டைட்டானிக்கப்பலின் சிதைவுகளைப் பார்வையிட சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற Titan என்ற நீர்மூழ்கிக் கப்பல், கடந்த 18 ஆம் திகதி மாயமான நிலையில், அதனைத் தேடும் பணியில் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த படற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேடுதல் பணியின்போது கப்பல் மாயமான பகுதியில் இருந்து பயங்கர ஒலியுடன் வித்தியாசமான சமிக்ஞை வருவதாகக் கனடா விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தேடுதல் பணியானது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஓஷன்கேட்‘ நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த நீர் மூழ்கிக் கப்பலில் பிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங் உட்பட 5 பேர் அழைத்துச் செல்லப் பட்டிருந்த நிலையில், கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.