”தனது 8 வயதான மகனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில்” நபர் ஒருவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த பையனூரை சேர்ந்த 44 வயதான கட்டிடத் தொழிலாளியொருவருக்கே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு2 மகன்கள் உள்ள நிலையில் அவரது மூத்த மகனான பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது.
மேலும் பாடசாலையிலும் அச்சிறுவன் சோர்வாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அச்சிறுவனிடம் குழந்தைகள் நல அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போதே ” அவனது தந்தை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய நிலையில், குறித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கானது பையனூர் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த நபருக்கு ரூ.1.25 லட்சம் அபராதமும் 90 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.