நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை வழங்கப்படும் விடுமுறைக்குப் பதிலாக ஜூலை 8 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் இயங்கும் என்றும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.