உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் குறித்து விவாதம் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 முதல் மாலை 7.30 வரை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மீதான வாக்கெடுப்பு விவாதத்தை அடுத்து இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டங்களை அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடாது என்றும் அன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்ட விவாதம் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.