தேசிய கொள்கையின் பிரகாரம் கட்டாயமாக வருடாந்த பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எங்களுக்கு கடந்த காலங்களில் வழங்கிய நிவாரண கட்டண திருத்தத்தை டீசல் விலை திருத்தத்துடன் சமன் செய்ய வேண்டும்.
2022 ஆம் ஆண்டு எங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை சீர்செய்யும் வழிமுறையையே 2023 ஆம் ஆண்டில் கேட்கின்றோம்.
வாகன உதிரிபாகங்களின் விலைகள் நூற்றுக்கு இருநூறு வீதத்தால் அதிகரித்துள்ளன.
எங்களை மேலும் மேலும் கடனாளிகளாக மாற்றாதீர்கள்.
தேசிய கொள்கையின் பிரகாரம் கட்டாயமாக வருடாந்த பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்.
இதற்காக எங்களுக்கு சட்ட ஒத்துழைப்பு பெறவும் முடியும். ஆகவே இது தொடர்பாக பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.