இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வன விலங்குகளினால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டமை குறித்து 320 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் வன விலங்குகளினால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்தல் விடுத்திருந்தார்.
குரங்குகள், காட்டுப்பன்றிகள், மயில்கள், வெட்டுக்கிளிகள் மற்றும் மரங்கொத்திகள், மற்ற பூச்சிகளால் அதிகளவில் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.