ஆடவருக்கான ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று, சூப்பர் சிக்ஸில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாவே அணி 165 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, சிம்பாவே அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்து.
அதன்படி முதலில் களமிறங்கிய சிம்பாவே அணி 32.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக சேன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் தீக்சன 4 விக்கெட்களையும் மதுஷங்க 3 விக்கெட்களையும் பதிரன 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.