அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 4 முதல் 84 வயதுக்கு உட்பட்ட மொத்தம் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டுள்ளர்.
குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சி, உலக புகழ் பெற்ற ஆன்மீக சுவாமிகளான பூஜ்ய கணபதி சச்சிதானந்த ஜி முன்னிலையில் நடந்ததுள்ளது.
மேலும் பலர் 8 ஆண்டுகளாக சுவாமியை பின்பற்றி அதனை நினைவில் கொள்ளும் வகையில் மனப்பாடம் செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்து ஆன்மீக தன்மையை பரப்பும் நோக்கில் கடந்த சில நாட்களாக சுவாமிஜி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.