பாகிஸ்தானில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதன்படி கடந்த மார்ச் மாத நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நாணய நிதியத்திடம் மேலும் 3 பில்லியன் டொலர் (சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகம் கடன் பெறும் 4-வது நாடாக பாகிஸ்தான் மாறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.