தனியார் பல்கலைக்கழகமொன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஐவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் மேற்கு வங்காளம் மற்றும் கோவையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று கல்லூரியில் ஏற்கனவே இருந்த சிறிய பக்கவாட்டுச் சுவரை ஒட்டி புதிதாக 10 அடி உயரம் கொண்ட பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்துள்ளதாகவும், இதன்போது திடீரென பழைய சுவர், தொழிலாளர்களின் மீது இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைக் கோவைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.