இலங்கையில் உள்ள குற்றவியல் நீதிமன்ற வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளாகவே உள்ளன என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடளுமன்ற கூட்டத்தொடரில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி குற்றவியல் நீதிமன்றங்களில் 5,550 சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் 4,312 பாலியல் வன்புணர்வு வழக்குகள் அடங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்..
குறித்த புள்ளி விபரங்கள் இலங்கை மக்களின் கலாசாரத்தை மற்ற நாடுகளுக்கு அம்பலப்படுத்துகின்றன நிலையில் இந்த தவறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.