நாட்டில் தற்பொழுது நிலவும் தென்மேற்கு பருவ மழை இன்று (வியாழக்கிழமை) முதல் சிறிதளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவுகளிலும் அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது கி.மீ. 45-50 வரை காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.