தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடங்கள் அகற்றப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, நேற்று தேனி மாவட்டத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”காவிரியும், முல்லை பெரியாறும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் இல்லாததால் நாம் தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டை புலம்பெயர் தொழிலாளர்கள் ஆக்கிமிரத்து வருவதைப் போன்றே கேரளாவிலும் வங்காளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதே நிலை நீடித்தால் தென் மாநிலங்களை முழுவதுமாக வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமிக்கும் சூழல் உருவாகும். அதுமட்டுமல்லாது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்ததால் தான், தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேருகின்றது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.