மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றரை லீற்றர் கசிப்புடன், 28 வயதான இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இதன் போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு 15,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.