தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் நேற்று இரவு (புதன்கிழமை) ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவினால் 3 சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
தங்கத்தைச் சுத்திகரிக்கும் நைட்ரஸ் ஒக்ஸைட் வாயு அடங்கிய சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.