நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 32 சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கம்பஹா மேல் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.