‘ மெட்டா நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரியான மார்க் ஸக்கர்பர்க், டுவிட்டருக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ (Threads) என்ற புதிய சமூக வலைத்தளமொன்றை கடந்த புதன் கிழமை அறிமுகப்படுத்தியிருந்தார்.
அந்தவகையில் திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணித்தியாலங்களிலேயே அதனை சுமார் ஒரு கோடி பேர் பதிவிறக்கம் செய்திருந்தமை மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், புகழ்பெற்ற அளவீட்டு நிறுவனமான சென்சார் டவர், திரெட்ஸ் செயலியின் பதிவிறக்கம் தொடர்பான தரவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது.
அதில் , திரெட்ஸ் செயலியானது அறிமுகம் செய்யப்பட்ட நாளில் உலகம் முழுவதும் சுமார் 40 மில்லியன் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் உலகளவில் இந்தியா மற்றும் பிரேசிலில் ஆகிய நாடுகளே அதில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாகவும் அவற்றின் ஒட்டுமொத்த பதிவிறக்கம் முறையே 22% மற்றும் 16% ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.