74 ஆண்டுகள் விடுமுறையே எடுக்காமல் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த மெல்பா மெபேன் (Melba Mebane)என்ற 90 வயதான மூதாட்டியே இச்சாதனையைப் படைத்துள்ளார்.
அவர் தனது 16 வயதில் இருந்து தனியார் நிறுவனமொன்றில் ஆடை மற்றும் அழகு சாதன பொருட்கள் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 74 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பணிபுரிந்து வந்த அவர் கடந்த 30ஆம் திகதி குறித்த பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்’நான் வீட்டில் இருந்ததை விட எனது நிறுவனத்தில் தான் அதிக நேரம் செலவழித்தேன். தற்போது வீட்டில் தனியாக இருப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.


















