இலங்கையில் கொமர்ஷல் வங்கியின் இன்றைய நிலவரப்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்விலை 302. 17 முதல் 303.63 ரூபாயாகவும் விற்பனை விலை 320.05 முதல் 321.60 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் படி, அமெரிக்க டொலரின் கொள்விலை 300.88 முதல் 303.85 ரூபாயாகவும் விற்பனை விலை 316 முதல் 317 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இருப்பினும், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்விலையில் மாற்றமில்லாமல் 302 ரூபாயாகவும் விற்பனை விலை 317 ரூபாயாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.