பொலன்னறுவை மன்னம்பிட்டி பிரதேசத்திலுள்ள கொட்டலீய பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டிக்கு தேசிய போக்குவரத்து சபையின் அனுமதிப் பத்திரம் இல்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்;திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எம்முடைய வீதி ஒழுங்குமுறை சட்ட விதிகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
ஒழுங்கு விதிமுறைகளை மீறி பயணிக்கும் பேருந்துகளுக்கு மிக அதிகளவிலான தண்டப்பணம் அறவிடும் வகையில் தற்போது சட்டம் ஒழுங்கமைக்கப்படுகின்றது.
அதற்கமைவாக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். நேற்று இரவு விபத்துக்குள்ளான பஸ் மற்றும் அதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறான பஸ்கள் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் நடமாடும் பரிசோதனை குழுக்களை உட்படுத்தி நாங்கள் பஸ் வண்டிகளில் பரிசோதனைகளை முன்னெடுப்போம்.
அவ்வாறு பஸ்களின் தகவல்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் அதனை நிதிமன்றத்தில் சமப்ர்பித்து தண்டனை பெற்றுக்கொடுத்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.