தனது இடமாற்றத்தை எதிர்த்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த மனுவை எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.