உள்நாட்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2020 முதல் 2022 ஆம் ஆண்டுவரை, இலங்கையில் நுகர்வுக்காக ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 623 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், நாட்டில் தேங்காய் எண்ணெய் பாவனையில், 22 சதவீதம் உள்ளூர் உற்பத்தியிலும், 78 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்யிலும் ஈடுபடுத்தப்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது எனக் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது