அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்காக நான்கு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
பொலன்னறுவை மன்னம்பிட்டியவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அனுமதிப்பத்திரமற்ற பேருந்துகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.