பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளது.
பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்களும், ஆண் இரட்டையர்களும் அடங்குவர்.
இவர்கள் 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அன்று பிறந்துள்ளனர். இந்நிலையில் இது தற்பொது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் அமைப்புஅறிவித்துள்ளது.
இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி அன்று பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.தற்போது அச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஓகஸ்ட் 1 என்பது கூடுதல் சிறப்பாகும். இந்நிலையில் இது கடவுளின் பரிசு என அத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.