இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நெல் கொள்வனவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.
ஆனால், பல பகுதிகளில் விளைச்சலுக்கு ஏற்ற உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.