முச்சக்கரவண்டிகளில் அலங்கார பொருட்களை நிறுவுவதற்கும் அலங்கரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு அலங்கார பொருட்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களை நிறுவுதல் 30 வகைகளின் கீழ் உள்ளதாகவும் மேலதிக தகவல்களை https://www.dmt.gov.lk/ இணையத்தளத்திலோ அல்லது முச்சக்கரவண்டி ஒதுக்கீட்டு கிளையிலோ 0113484520 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைய மோட்டார் வாகன சட்டத்தின் (203 அதிகார சபை) இணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.