இந்த உலகின் மிக நீண்ட முத்ததிற்கான போட்டிகள் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தாய்லாந்தை சேர்ந்த ஏக்கச்சாய் லக்ஷனா திரானரத் தம்பதியினர் சுமார் 58 மணி நேரம் முத்தமிட்டு உலக சாதனையை படைத்தனர் . இதுவே தற்போது வரை, சுமார் 9 ஆண்டுகளாக மிக நீண்ட முத்தமாக இருக்கிறது. இதுவே உலகின் மிக நீண்ட முத்தமாக இருக்கும் என கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு கூறியுள்ளது.ஆனால் தற்போது இந்த பிரிவில் எந்த போட்டிகளும் நடைபெறாது என்று கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
உலகின் மிக நீண்ட முத்ததிற்கான போட்டிகள், போட்டியாளர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும் என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு கூறியுள்ளது.58 மணி நேரம் தொடர்ந்து முத்தமிடுவதன் மூலம் போட்டியாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவே மிக நீண்ட நேர முத்தம் என்பதால் இதை முறியடிப்பதற்கான போட்டியில் ஈடுபடும் போட்டியாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஏனென்றால் போட்டிக்கான விதிகள் மிக கடுமையாக உள்ளன. எனவே இனியும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு சாத்தியமில்லை என கின்னஸ் அமைப்பு விளக்கமளித்துள்ளது.
புதிய முத்த சாதனைப் போட்டிக்கான விதிகளிலும் மாற்றம் கொண்டு வர கின்னஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி போட்டியின் போது குறிப்பிட்ட அளவு இடைவெளியில் 5 நிமிடம் ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஓய்வு நேரத்தில் போட்டியாளர்கள் உண்பது, தூங்குவது, இயற்கை உபாதைகள் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் முத்தத்தில் இருந்து போட்டியாளர்கள் தங்கள் உதடுகளையும் பிரித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால் போட்டியாளர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் வலி ஆகியவற்றில் இருந்து போட்டியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்கிறது கின்னஸ் அமைப்பு.