ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நீதிபதி நவரட்ண மாரசிங்கவால் குறித்த வழக்கு செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு மோதரை மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடும்போது அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக முன்னாள் அமைச்சர் மற்றும் மேலும் இருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.