கென்யாவின் நைரோபி உட்பட நகரங்களில் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன.
குறித்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதால் இதுவரை 06 இக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
வாழக்கைச் செலவு அதிகரித்தமைக்கு எதிராக நாடளாவிய போராட்டங்களை நடத்த வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடிங்கா அறைகூவல் விடுத்தன் விளைவாகவே இந்த போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.