அர்ஜென்டினாவில் இன்று 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த நிலநடுக்கம் அர்ஜென்டினாவின் அண்டை நாடான சிலியிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்காவின் அலாஸ்காவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.