நம்முடைய சாட்டை வேறொரு மொபைலில் எளிதாக ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் மொபைலை மாற்றும்போதும் உங்கள் பழைய மொபைலில் இருக்கும் வாட்ஸ் அப் சேட் அனைத்தையும் புது மொபைலுக்கு மாற்ற வேண்டுமெனில் கிளவுட் பேக் மூலமாகத்தான் மாற்ற வேண்டி இருக்கும்.
ஆனால் வாட்ஸ் அப் பேக்கப் இல்லாமலேயே உங்களது சாட்டை பழைய மொபைலில் இருந்து புதிய மொபைலுக்கு மாற்றிக் கொள்ள முடியும் என்றால் நம்ப முடிகிறதா?
உண்மைதான்! எப்படி ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கு வாட்ஸ் அப் சாட்டை கிளவுட் பேக்கப் இல்லாமலேயே ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
பிறகு சிம் கார்டுடன் கூடிய உங்களது பழைய மொபைலின் செட்டிங்கிற்கு சென்று சாட் என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் கீழே ஸ்க்ரோல் செய்து டிரான்ஸ்ஃபர் சாட் என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.இப்போது அதில் ஸ்டார்ட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
பிறகு நீங்கள் எந்த மொபைலில் வாட்ஸ் அப்பை ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டுமோ, அந்த மொபைலில் வாட்ஸ் அப்பை இன்ஸ்டால் செய்து கொண்டு பழைய மொபைலில் இருக்கும் அதே எண்ணை என்டர் செய்து ஓடிபியை என்டர் செய்து கொள்ளவும்.
இப்பொது உங்களது புதிய போனில் அக்கவுண்ட்டை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான QR code ஒன்று தோன்றும். ஏற்கனவே வாட்ஸ் அப் இன்ஸ்டால் செய்து வைத்துள்ள பழைய போனின் கேமராவை ஓபன் செய்து QR code ஸ்கேன் செய்து கொள்ளவும்.
அவ்வளவுதான் உங்கள் வாட்ஸ் அப் சாட் ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான வேலை துவங்கி விட்டது .
ட்ரான்ஸ்ஃபர் முழுமையாக முடியும் வரை இரண்டு மொபைல்களையும் ஒரே நெட்வொர்க்கில் இணைந்திருக்கும் படி இருப்பதோடு வேறு எந்த வேலையும் மொபைலில் செய்யாமல் இருக்க வேண்டும்.
இந்த செயல்முறையின் போது வேறு எந்த செயலியையும் பயன்படுத்தக் கூடாது. ஒட்டுமொத்த சாட்டையும் ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கு 20 இலிருந்து 25 நிமிடங்கள் வரை எடுக்கலாம். இது உங்களுடைய வைஃபை நெட்வொர்க்கின் வேகத்தை பொறுத்து அமையும்.
ட்ரான்ஸ்ஃபர் முழுமையாக முடிந்ததும் அதற்கான நோட்டிபிகேஷன் உங்களது திரையில் தோன்றும். இப்போது உங்களது பழைய ஃபோனில் உள்ள வாட்ஸ் அப் சாட் அனைத்தையும் உங்கள் புதிய ஃபோனில் பார்க்க முடியும்.
மேலும் இந்த செயல்முறையின் போது வாட்ஸ் அப் சாட்டை மட்டுமே உங்களால் ட்ரான்ஸ்ஃபர் செய்ய முடியும். வாட்ஸ் அப் கால்களை ட்ரான்ஸ்ஃபர் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.