நாட்டில் ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்கட்சிகள் ஒன்று கூடியுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சுமத்தியுள்ளார்.
அந்தமான் போர்ட் பிளேயரில் வீர சாவர்கர் சர்வதேச விமான நிலைய முனையத்தை இணைய வழியில் இன்று ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய எதிர்கட்சிகள் நாட்டு மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்திற் கொள்ளாமல் தங்களின் குடும்பங்களை மாத்திரம் நலன் மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டம்; நேற்று பெங்களுரில் ஆரம்பமானது.
குறித்த கூட்டத்தில் 24 கட்சி தலைவர்கள் பங்கேற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது,