• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை மலையகம்
தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/18
in மலையகம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

தோட்டத் தொழிலாளர்களால், தோட்ட  நிர்வாகத்திற்கு எதிராக ரம்பொடையில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

”தாம் வாழும் தோட்ட வீடுகளை விட்டு வெளியேறுமாறு”  தோட்ட நிர்வாகம் தம்மை  அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்தே   இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற  இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ”கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ரம்பொடை, ஆர்.பி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை வழங்கக்  கோரி போராட்டத்தை முன்னெடுத்த தம்மை, தாம் வசிக்கும் லயன் வீடுகளை விட்டு வெளியேறுமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்துவதாக ரம்பொடை தோட்டம், ஆர்.பி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் பரம்பரையாக அரசியலில் ஈடுபட்டுள்ள மற்றும் பெருந்தோட்ட சமூகத்தை வழிநடத்தும் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்படும் ரம்பொட, ஆர்.பி.பிரிவு தோட்டத்தில், ஏழு லயன் வீடுகளில் வசிக்கும் 150 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் கூலித் தொழிலாளிகளாகப்  பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2023 மே 16 ஆம் திகதி முதல் குறித்த 48 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 39 குடும்பங்கள் முன்னறிவிப்பின்றி வேலைக்குச் செல்லாமையால், தோட்ட நிர்வாகத்தால் வீடுகளை ஒப்படைக்குமாறும் குறித்த குடும்பங்களுக்கு கூறப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் ரம்பொடை, ஆர்.பி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை வழங்கக்  கோரி பலத்தடவைகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அவ்வாறான ஒரு போராட்ட வடிவமாகவே, மே 16ஆம் திகதி முதல் தோட்ட மக்கள் பணிக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மே 16 முதல் பணிக்கு சமூகமளிக்காத தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜூலை 5ஆம் திகதி தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் கடிதம் மூலம் விடுத்த அறிவிப்பில், 7 நாட்களுக்குள் பணிக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்கள் சேவையை விட்டு வெளியேறியதாகக் கருதப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக பணியில் சேரும் தொழிலாளர்களுக்கு தங்குமிடம் வழங்க வேண்டியது அவசியம் என்பதால், பணியில் இருந்து வெளியேறிய தொழிலாளர்கள் பயன்படுத்திய லயன் அறையை 15 நாட்களுக்குள் மீள ஒப்படைக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் சட்ட நடவடிக்கை  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் மாவட்ட தொழில் அலுவலகத்தின், உதவி தொழில் ஆணையாளர் ஆகியோருக்கும் தோட்ட நிர்வாகம் குறித்த கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வைத்துள்ளது.

அந்த லயன் அறைகளிலேயே தாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1971 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தோட்ட வீடுகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு அமைய, தோட்ட நிர்வாகமானது, நீதிமன்றத்தின் அனுமதியின்றி தோட்டத் தொழிலாளி ஒருவரை தோட்ட வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

blank blank

Related

Tags: protest
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்கட்சிகள் ஒன்று கூடுகின்றன

Next Post

ஐந்து மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

Related Posts

மட்டுப்படுத்தப்பட்ட ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து!
இலங்கை

மட்டுப்படுத்தப்பட்ட ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து!

2026-06-15
வெவண்டன் தமிழ் வித்தியாலயத்திற்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய கட்டிடம் கோரி பெற்றோர்கள் போராட்டம்!
இலங்கை

வெவண்டன் தமிழ் வித்தியாலயத்திற்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய கட்டிடம் கோரி பெற்றோர்கள் போராட்டம்!

2026-06-09
மலையக பகுதிகளில் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபா நிவாரணம்!
இலங்கை

மலையக பகுதிகளில் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபா நிவாரணம்!

2026-06-09
மலையகத்தில் ஐஸ் போதைப்பொருள்விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!
இலங்கை

மலையகத்தில் ஐஸ் போதைப்பொருள்விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

2026-06-09
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!
இலங்கை

நுவரெலியாவில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி

2026-06-05
முச்சக்கர வண்டியில் மரம் முறிந்து விபத்து; மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு!
இலங்கை

முச்சக்கர வண்டியில் மரம் முறிந்து விபத்து; மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு!

2026-06-04
Next Post
ஐந்து மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

ஐந்து மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்: ஜீவன்

வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்: ஜீவன்

மீண்டும் ஒரு மர்ம மரணம்

மீண்டும் ஒரு மர்ம மரணம்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

2026-06-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.