• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை மலையகம்
வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்: ஜீவன்

வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்: ஜீவன்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/18
in மலையகம்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

மின்சாரக் கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனினும்  மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டண உயர்வு இடம்பெறும் என தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (18) இடம்பெற்ற   வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானால் நீர் கட்டணம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப்  பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” நீர் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்துவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தேன்.

மின்சாரக்  கட்டணம் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர்வழங்கல் துறையை நிர்வகிப்பதற்கு 425 மில்லியன் ரூபா செலவு ஏற்படுகின்றது.  இதற்கு மேலதிகமாக 2,400 மில்லியன் ரூபா கடனும் செலுத்தப்படுகின்றது. இதுவரை காலமும் முறையான நடவடிக்கை இடம்பெறாமை இதற்கு காரணமாகும். அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கையாகவே இது இடம்பெறுகின்றது.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நீர் கட்டணம் உயர்த்தப்படும். நாடாளுமன்றத்தில் நாளை (19) ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது இது பற்றி தெளிவுபடுத்தப்படும்.

ஒரு குடும்பத்தில் ஐவர் இருந்தால் 15 முதல் 20 அலகுகள்தான் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கும், சமுர்த்தி பயனாளிகளுக்கும் நீர் கட்டண உயர்வால் தாக்கம் ஏற்படாது. நீர் கட்டண அதிகரிப்பு யோசனை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இல்லை.இது குறித்த உத்தேச திட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் அண்மையில் கூட்டமொன்றை நடத்தியிருந்தேன். இதில் எதிரணியினர் பங்கேற்கவில்லை.  அன்று இல்லாத அக்கறை இன்று திடீரென ஏன் வந்துள்ளது? தூங்குபவரை எழுப்பலாம். தூங்குபவர்போல் நடிப்பவரை எழுப்ப முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நீர் கட்டண அதிகரிப்பு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இடம்பெறும்! pic.twitter.com/QuGndah468

— Athavan News (@AthavanNews) July 18, 2023

Related

Tags: Jeevan Thondaman
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐந்து மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

Next Post

மீண்டும் ஒரு மர்ம மரணம்

Related Posts

நாவலப்பிட்டியில் சோகம்  லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது.
இலங்கை

நாவலப்பிட்டியில் சோகம் லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது.

2026-05-01
மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.
இலங்கை

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

2026-05-01
வைத்தியசாலை ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு!
இலங்கை

வைத்தியசாலை ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு!

2026-04-30
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர்  கடும் நடவடிக்கை !
இலங்கை

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர் கடும் நடவடிக்கை !

2026-04-29
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 20கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 20கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு!

2026-04-29
பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!
இலங்கை

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

2026-04-28
Next Post
மீண்டும் ஒரு மர்ம மரணம்

மீண்டும் ஒரு மர்ம மரணம்

விமான விபத்தில் ஐவர் உயிரிழப்பு

விமான விபத்தில் ஐவர் உயிரிழப்பு

அதிகரித்துள்ள தேங்காய் விலை

அதிகரித்துள்ள தேங்காய் விலை

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

0
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

0
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

2026-05-07

Recent News

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.