யாழில் நேற்று இரவு கைகள் வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான விடுதியின் அருகில் உள்ள காணிக்குள் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் தாவடி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான தர்மலிங்கம் பவிசன் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும் இளைஞனின் சடலத்துக்கு அருகில் தேசிக்காய், பீடி , தீப்பெட்டி , பியர், ஊசி (சிரிஞ்) உள்ளிட்டவை இருந்துள்ளதால் ”போதையில் அவர் தனது கைகளை வெட்டி இருப்பார் எனவும், இதனால் ஏற்பட்ட இரத்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.