மலையக மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பிரதமருடன் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இன்று இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கீகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.