தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை ஜனாதிபதி வழங்காவிட்டால் விரைவில் அவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாம் ஜனாதிபதிக்கு ஒன்றைக்கூற விரும்புகின்றோம். நாடு ஜனாதிபதிக்குச் சொந்தமானது அல்ல. ஒரு இன மக்களுக்கு மட்டும் சொந்தமானது மட்டுமல்ல.
இந்த நாட்டில் அரசியல் உரிமை என்பது தமிழ் மக்களுக்கும் உரித்தான விடயமாகும். நான் விரும்பியதைத் தான் தருவேன் என ஜனாதிபதி கூறுவாராக இருந்தால் விரைவில் நீங்களும் நிராகரிக்கப்படுவீர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விரைவில் நீங்களும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் போடும் பிச்iசையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதையும் ஜனாதிபதி நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறாமல் அவர்களைப் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கான சிறந்த இடத்தினை வழங்காவிட்டால் இந்த நாடு ஒரு சிறந்த இடத்திற்கு வர முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த விடயத்தில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரைக்கும் தமிழர்களை ஏமாற்றி விடலாம் என ஜனாதிபதி நினைக்கக் கூடாது.
அவ்வாறு தமிழர்களை ஏமாற்ற ஜனாதிபதி நினைப்பாராக இருந்தால் அவரும் விரைவில் அழிந்து போவார் என்பதையே நாம் இங்கே கூற விரும்புகின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
@athavannews எமக்கு பிச்சை போட்டு எம்மை ஏமாற்ற வேண்டாம்! #news#athavan#updats