இன்று சேவையில் ஈடுபடவிருந்த 4 அலுவலக ரயில்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை, பொல்கஹவெல மற்றும் கம்பஹா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இயக்கப்படவிருந்த ரயில்களே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அலுவலக ரயில்களை இயக்குவதற்கு இன்றைய தினம் காலை சாரதி உதவியாளர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை என ரயில்வே சாரதிகள் சங்கத்தின் தலைவர் சந்தன லால் தெரிவித்துள்ளார்.
இதனால் கோட்டையிலிருந்து இன்று காலை சேவையில் ஈடுபட வேண்டிய சில அலுவலக ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.