சர்வகட்சி மாநாடு என்பது ஒரு அரசியல் நாடகம் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வ கட்சி மாநாடு உண்மையான நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படும் போது எந்தவொரு கலந்துரையாடலும் வெற்றியளிப்பதாகவும், இது அரசியல் விளையாட்டாகவும்,சூழ்ச்சியாகவும் அமையக் கூடாது.
சர்வ கட்சி மாநாட்டிற்கு எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் எந்த நிகழ்ச்சி நிரல் என்பது குறித்து தெரியாதுள்ளது.
சர்வ கட்சி மாநாட்டிற்கு முன்னர் ஆளும் தரப்பினர் ஒன்றிணைந்து ஒரு நிலைப்பாட்டை எட்டுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இந்திய விஜயத்தின் பிற்பாடு சகல தேர்தல்களும் அடுத்த வருடத்துக்கள் நடத்தப்படும் என்ற எதிர்பாரப்பு நிலவுகிறது.
சர்வகட்சி மாநாட்டிற்கு சஜித் பிரேமதாச அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் எந்தோக்கத்திற்காகவென்ற எந்த குறிப்பும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
பல்வேறு காரணங்கள் இதற்கு தெரிவிக்கப்படுகின்றன. நோக்கம் பற்றிய தெளிவு எங்களுக்கு தெரியவில்லை.
அவ்வாறு 13 ஆவது திருத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பானதாக இருந்தால் முதலில் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோருகிறோம்.
ஜனாதிபதியின் செயற்பாடுகளாலையே ஆறு வருடங்களுக்கும் மேலமாக மாகாண சபையின் செயற்பாடுகள் முடக்கிக் கிடக்கின்றன.
இந்தியாவை திருப்பதிப்படுத்தவும், தமிழ் அரசியல் கட்சிகளை திருப்படுத்தவும் இந்த சர்வகட்சி மாநாடு அமையக் கூடாது என்பதே ஐக்கிய மக்கள் சக்தியினது அபிப்பிராயமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.