குற்றாலத்தில் குளிப்பதற்கு ஆண்களுக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றால மெயின் அருவியில், திங்கட்கிழமை மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை, ஆண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதே வேளையில், பெண்கள் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருப்பதால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.