சந்தையில் கரட் மற்றும் போஞ்சி ஆகியவற்றின் விலைகள் அதிகமாக காணப்படுவதாக பொருளாதார நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 300 முதல் 350 ரூபா வரையிலும், மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் 400 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பேலியகொட, தம்புள்ளை, மீகொட மற்றும் நுவரெலியா ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் கரட்டின் மொத்த விலை 400 முதல் 470 ரூபா வரை பதிவாகியுள்ளது.
இருப்பினும், வெண்டைக்காய் விலை சிறிது குறைந்துள்ளது. பல பொருளாதார நிலையங்களில் பச்சை மிளகாயின் மொத்த விலை 500 ரூபாவை அண்மித்துள்ளதுடன், கெப்பிட்டிபொல பொருளாதார நிலையத்தில் 600 முதல் 650 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.