மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை சுமார் ஒரு வருட காலம் தனிமைச் சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி தற்போது அரசாங்க கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் ஆங் சான் சூகியின் உடல் நிலை தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அவரை வீட்டுக் காவலில் வைக்க மியன்மார் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.