சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. சுமார் 6 ஆயிரம் எக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது.
இதேவேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.