கிளிநொச்சியில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரப்பலகைகளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் மரப்பலகைகள் வைத்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே விசேட அதிரடிபடையினரால் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல லட்ச ரூபாய் பெறுமதியான முதிரை பலகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் இன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளதுடன் தடையப்பொருட்கள் நாளை (02) நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.