அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூரைக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறை , மீன்பிடி துறை, கனிம வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைதரசன் போன்ற திட்டங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக உயர்ஸ்தானிகர் போல் தெரிவித்துள்ளார்.