அம்பாறை, அக்கரைப்பற்று ,ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட மொட்டையாகல் பகுதியில் நீர் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான பெறுமதி வாய்ந்த 15 நீர் குழாய்கள் இன்று (01) எரிந்து சேதமாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ”அக்கரைப்பற்று மொட்டையாகல் பகுதி ஊடாக சாகாமம் பகுதிக்கு நீர் இணைப்பினை கொண்டு செல்ல நீர் இணைப்பு குழாய்கள் ஒன்றாக வயல்பகுதியொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இதன்போது வயல் வெளியில் ஏற்பட்ட தீ காரணமாக அக்குழாய்கள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தெட்சணமூர்த்தி நவனீதராஜ் குறிப்பிட்டார்.
இந்நிலையில் விவசாய காணிகள் ஊடாக நீர் இணைப்பு சேவை இடம் பெறுவதால் விவசாயிகள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் மேலும் குறித்த விடையம் தொடர்பில் ஒப்பந்தகாரர் உள்ளிட்ட தரப்பினர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.