முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த தினத்தில் அனைத்து பக்தர்களையும் ஒன்று திரண்டு ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த தகவலை அவர்கள் தெரிவித்துள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்டு தற்போது அந்த ஆலயத்தின் வழிபாடுகள் தொடர்ச்சியாக ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த ஆலயத்தினை மீட்டெடுப்பதற்காக தங்களோடு தொடர்ச்சியாக ஒன்றிணைந்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் எதிர்வரும் பொங்கல் தினத்திலும் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு குறித்த ஆலய பொங்கல் விழாவினை மிக சிறப்பாக நடத்துவதற்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் குறித்த ஆலயம் நிரந்தரமாக எங்களுடைய கைகளில் வருவதற்கு அனைத்து மக்களும் தங்களது பங்களிப்பை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்