இன்று நள்ளிரவு முதல் நீர்க் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நீர்க் கட்டணங்கள் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும்.
இதேவேளை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு இன்று (புதன்கிழமை) இரவு வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.