பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் வங்கிகள் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் வட்டி வீதத்தை 5.25% ஆக நேற்றைய தினம் உயர்த்தியுள்ளன.
பிரித்தானிய அரசானது அண்மைக்காலமாகப் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறியமை, கொரோனாப் பரவல், உக்ரேன் ரஷ்யப் போர் உள்ளிட்ட விடயங்கள் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம், பணவீக்கம் கணிக்கப்பட்டதை விட 7.9% ஆகக் குறைந்துள்ளது. மேலும் தீவிரமான வட்டி வீத உயர்வை அறிமுகப்படுத்துவதற்கான அழுத்தத்தைத் தளர்த்தியது.
அந்த வகையில் நாட்டின் பணவீக்கத்தைக் கண்டுப் படுத்தும் வகையில் பொருளாதார வல்லுநர்களின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வங்கிகள் தொடர்ந்தும் 14 ஆவது முறையாக வட்டிவீதத்தை உயர்த்தியுள்ளது.